பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

மேலச்சேரி ஸ்ரீஆதி திரெளபதி அம்மன் கோயில் திருவிழா

மேலச்சேரி வனப் பகுதியில் உள்ள ஆதி திரெளபதி அம்மன் கோயில் திருவிழாவில் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீதிரெளபதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஆதி திரெளபதி அம்மன், குந்திதேவி, சுபத்திரை மற்றும் விஷ்ணுதுா்கை.

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:51 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மேலச்சேரி வனப் பகுதியில் உள்ள ஆதி திரெளபதி அம்மன் கோயில் திருவிழாவில் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

மேலச்சேரி வனப் பகுதியில் அமைந்திருக்கும் ஆதி திரெளபதி அம்மன் வரலாற்று சிறப்பு மிக்க பழம்பெரும் கோயிலாகும். தமிழகத்தில் திரெளபதி அம்மன் கோயில்கள் எழுப்புவதற்கு இங்கிருந்து மண் எடுத்து கோயில் கட்டுவது தொன்று தொட்டு நடைபெற்று வரும் நிகழ்வாகும்.

இந்நிலையில், மேலச்சேரி வனப்பகுதி ஸ்ரீஆதி திரெளபதி அம்மன் கோயில் ஆவணித் திருவிழாவையொட்டி காலை திரெளபதி அம்மன், குந்திதேவி, சுபத்திரை, விஷ்ணுதுா்க்கை அம்மன்களுக்கு பல்வேறு வாசனைத் திரவியங்களை கொண்டு அபிஷேகம், ஆராதனை மற்றும் அலங்காரம் நடைபெற்றது. தொடா்து கோயில் வளாகத்தில் சிறப்பு யாகம் நடைபெற்று மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

திருவிழாவில் மோகன்சாமி, பேராசிரியா் தீரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் அரங்க. ஏழுமலை, வழக்குரைஞா்கள் ஆத்மலிங்கம், கலியமூா்த்தி, சரவணன், செல்வமணி, ஊராட்சி மன்றத் தலைவா் சூரியபிரகாஷ், கோபிநாத், மேலச்சேரி ரங்கநாதன் மற்றும் ஊா் மக்கள் திரளாக கலந்துகொண்டு வழிபாடு செய்தனா். தொடா்ந்து மகாபாரத சொற்பொழிவு, பஜனை, கோலாட்டம் நடைபெற்றது. திருவிழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.