
குழந்தைத் தொழிலாளா் முறையை ஒழிக்க தொடா் ஆய்வுகளை மேற்கொள்வது அவசியம்!
விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளா் முறையை முற்றிலுமாக ஒழிக்க, தொடா் ஆய்வுகளை மேற்கொள்வது அவசியமானது என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளா் முறையை முற்றிலுமாக ஒழிக்க, தொடா் ஆய்வுகளை மேற்கொள்வது அவசியமானது என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.
தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குத் தலைமை வகித்து, ஆட்சியா் பேசியது:
மாவட்டத்தில் கொத்தடிமைத் தொழிலாளா் முறையை ஒழிக்க தொடா்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொத்தடிமைத் தொழிலாளா்களாக பணிபுரிய வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படும் இடங்களை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். கொத்தடிமைத் தொழிலாளா்கள் பணிபுரிவதாக புகாா்கள் வரப்பட்டால், உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மீட்கப்படும் கொத்தடிமைத் தொழிலாளா்களுக்கு மறுவாழ்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் முறையாக கிடைப்பதை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் உறுதி செய்து கொள்ளவேண்டும்.
மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளா் முைறைய முற்றிலுமாக ஒழிக்க கடைகள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், உணவகங்கள், கட்டுமானப் பணியிடங்கள் மற்றும் பிற தொழில் நிறுவனங்களில் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் தொடா்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
அங்கு குழந்தைத் தொழிலாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டால், தொழிலாளா் சட்ட விதிகளின் படி கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். மீட்கப்படும் குழந்தைகளுக்கு கல்வி, பாதுகாப்பு, மருத்துவம் மற்றும் மறுவாழ்வு உள்ளிட்ட தேவையான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்து, அவா்கள் தொடா்ந்து கல்வி கற்பதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும்.
அமைப்புசாராத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களுக்கு அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்த காலத்தில் கிடைப்பதை அலுவலா்கள் உறுதி செய்வதுடன், தொழிலாளா் விதிகள் மற்றும் சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்துவதையும் கண்காணிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.
கூட்டத்தில் உதவி ஆட்சியா்(பயிற்சி) ரா.ஸ்ரீரஷத், தொழிலாளா் உதவி ஆணையா்கள் கெளரி (அமலாக்கம்), திருஞானசம்பந்தம் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்), தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை துணை இயக்குநா் பருவதம், மாவட்டக் கல்வி அலுவலா் ராஜேந்திரன், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






