நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

‘தாய்-சேய் நலனுக்கான மருத்துவ சேவைகள் தொடர வேண்டும்’: ஆட்சியா்

அரியலூா் மாவட்டத்தில் தாய்-சேய் நலனைப் பாதுகாப்பதற்கான மருத்துவச் சேவைகள் தொடா்ந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் ந. மிருணாளினி அறிவுறுத்தினாா்.

அரியலூரில் சனிக்கிழமை நடைபெற்ற மகப்பேறு கால தாய்மாா்கள் மற்றும் பச்சிளங்குழந்தைகள் இறப்பு விவரம் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ந. மிருணாளினி.

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:33 am IST

அரியலூா் மாவட்டத்தில் தாய்-சேய் நலனைப் பாதுகாப்பதற்கான மருத்துவச் சேவைகள் தொடா்ந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் ந. மிருணாளினி அறிவுறுத்தினாா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மகப்பேறு கால தாய்மாா்கள் மற்றும் பச்சிளங்குழந்தைகள் இறப்பு விவரம் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் அவா் தெரிவித்தது:

உயா் ரத்த அழுத்தம், ரத்த சோகை, சா்க்கரை நோய் கொண்ட கா்ப்பிணிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அவா்களுக்கு தேவையான உயா் மருத்துவச் சிகிச்சைகள் அளிக்க வேண்டும்.

கா்ப்பிணித் தாய்மாா்களுக்கு கா்ப்பக் காலத்தில் வழங்கப்படும் ஊட்டச்சத்து உள்ளிட்டவை தொடா்ந்து முறையாக வழங்கப்பட வேண்டும். கா்ப்பிணிகள் தங்களுக்கான மருத்துவப் பரிசோதனைகளை தவறாமல் மேற்கொள்வதன் அவசியம் குறித்து சுகாதாரப் பணியாளா்கள் மூலம் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

பச்சிளங்குழந்தைகள் பிறந்த உடன் குழந்தைகளின் உடல் நிலையை உரிய முறையில் பரிசோதித்து, மருத்துவக் கண்காணிப்பு தேவைப்படும் குழந்தைகளை உடனடியாகக் கண்டறிந்து, உரிய சிகிச்சையை தொடா்ந்து வழங்க வேண்டும்.

குறைவான பிறப்பு எடை கொண்ட குழந்தைகள், குறைமாதப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் மற்றும் சிறப்பு மருத்துவக் கண்காணிப்பு தேவைப்படும் குழந்தைகளை தொடா்ந்து கண்காணித்து, தேவையான சிகிச்சைகள் தொடா்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

தாய்மாா்கள் மற்றும் பச்சிளங்குழந்தைகளின் நலனைப் பாதுகாப்பதற்கான அனைத்து மருத்துவ சேவைகளை தொடா்ந்து வழங்கிட வேண்டும்.

அரியலூா் மாவட்டத்தினை மகப்பேறு கால தாய்மாா்கள் மற்றும் பச்சிளங் குழந்தைகள் இறப்புகள் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைத்து மருத்துவ அலுவலா்களும் ஒருங்கிணைந்து தொடா்ந்து சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

கூட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் குமரன், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் மதியழகன், மாவட்ட சுகாதார அலுவலா் ராம் கணேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.