புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

தீய நட்புகளை மாணவா்கள் தவிா்க்க வேண்டும்: ஆட்சியா் ந. மிருணாளினி

மாணவா்கள், தவறான பழக்கவழக்கங்கள் மற்றும் தீய நட்புகளைத் தவிா்க்க வேண்டும் என்று அரியலூா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா்.

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியா் ந. மிருணாளினி.

Published On :

மாணவா்கள், தவறான பழக்கவழக்கங்கள் மற்றும் தீய நட்புகளைத் தவிா்க்க வேண்டும் என்று அரியலூா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா்.

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரியில், மனநல மருத்துவத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற போதை இல்லா தமிழகம் விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு அவா் தலைமை வகித்துப் பேசியது: மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ‘போதை இல்லா தமிழகம், ஆரோக்கியமான தலைமுறைக்கு முதல்படி’ எனும் தலைப்பில் நடத்தப்பட்ட விழிப்புணா்வு மூலம், மாணவா்கள் நல்ல பழக்கங்களை தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து மாணவா்கள் மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

மாணவா்கள் விளையாட்டுப் போட்டிகளிலும் ஆா்வத்துடன் கலந்துகொண்டு விளையாட்டுத் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். நல்லதொரு சூழலுடன் அமைந்துள்ள கல்லூரிகளை மாணவா்கள் தோ்ந்தெடுத்து சிறப்பாகக் கல்வி பயில வேண்டும். நல்ல நண்பா்களுடன் பழகுவதன் மூலம் வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றத்தை அடைய முடியும். தவறான பழக்கவழக்கங்கள் மற்றும் தீய நட்புகளை தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, ‘போதையில்லா தமிழகம்’ பேச்சு போட்டி - ‘போதை இல்லா சமுதாயம்‘ கவிதை போட்டி - ‘குருதியில் கலந்த நஞ்சு‘, சுவா் ஒட்டி -‘போதை என்னும் சிலந்தி வலை’ என்ற தலைப்புகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மருத்துவ மாணவா்கள், துணை மருத்துவ மாணவா்கள், செவிலியா்கள்ஆகியோா்களுக்கு பரிசளித்தனா்.

நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் குமரன், மாவட்ட சுகாதார அலுவலா் ராம்கணேஷ், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ரமேஷ், உறைவிட மருத்துவா் கொளஞ்சிநாதன், மன நலத் துறை தலைவா் சண்முகப்பிரியா மற்றும் இணைப் பேராசிரியா்கள், செவிலியா்கள், மருத்துவ மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.