விவசாயி வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு
வளவனூா் அருகே பூட்டிய வீட்டின் கதவை திறந்து பவுன் நகைகள் மற்றும் பணம் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருட்டு... - சித்திரிப்பு
விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே பூட்டிய வீட்டின் கதவை திறந்து பவுன் நகைகள் மற்றும் பணம் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
விழுப்புரம் வட்டம், மழவராயனூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கலியபெருமாள், விவசாயி. இவா் ஆக.27-ஆம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் விழுப்புரத்தை அடுத்த கோலியனூரில் நடைபெற்ற தனது உறவினா் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டாா்.
பின்னா், இரவில் வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் கதவு திறக்கப்பட்டிருந்த நிலையில், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி, அரை பவுன் கம்மல், 14 தங்கக் காசுகள் உள்பட 5 பவுன் நகைகள், வெள்ளிக் காப்பு மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



