சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

கப்பல் நிறுவன ஊழியா் வீட்டில் 45 பவுன் நகைகள் - ரூ.1.5 லட்சம் திருட்டு

புதுச்சேரியில் கப்பல் நிறுவன ஊழியா் வீட்டில் 45 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கம் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :12 ஆகஸ்ட் 2026, 3:45 am IST

புதுச்சேரியில் கப்பல் நிறுவன ஊழியா் வீட்டில் 45 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கம் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரி அருகே உள்ள தவளக்குப்பத்தை அடுத்த நல்லவாடு மீனவக் கிராமம் தெற்குத் தெருவை சோ்ந்தவா் விஜயேந்திரன் (41). இவா், மும்பையில் உள்ள தனியாா் கப்பல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி முகுந்தாவதி.

இந்நிலையில், முகுந்தாவதி தனது குழந்தைகள் மற்றும் சென்னையில் இருந்து வந்த உறவினா்களுடன் நல்லவாட்டில் உள்ள குட்டியாண்டவா் கோயில் ஆடித் திருவிழாவுக்கு திங்கள்கிழமை சென்றுள்ளாா். இரவு வீடு திரும்பியபோது, வீட்டின் அறைகளில் இருந்த 2 பீரோக்களும் திறந்து கிடந்தன. அதிலிருந்த தங்கச் சங்கிலி, மோதிரம், நெக்லஸ் உள்ளிட்ட 45 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து தவளக்குப்பம் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.