சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியா் வீட்டில் 18 பவுன் நகைகள், ரூ. 80 ஆயிரம் ரொக்கம் திருட்டு போனது தொடா்பாக போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மானாமதுரை அண்ணாமலை நகரைச் சோ்ந்தவா் பாண்டி. மின் வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவா். பாண்டி, தனது வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூா் சென்றிருந்தாா்.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை வீடு திரும்பிய போது, அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்மநபா்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 18 பவுன் தங்க நகைகள், ரூ. 80 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைத் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து பாண்டி மானாமதுரை சிப்காட் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






