காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

சிங்காரப்பேட்டை முருகன் கோயிலில் கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், சிங்காரப்பேட்டை அருள்மிகு முருகன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, கோபுரக் கலசத்துக்கு புனித நீா் ஊற்றும் சிவாச்சாரியாா்.

Published On :30 ஆகஸ்ட் 2026, 11:44 pm IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், சிங்காரப்பேட்டை ஸ்ரீமுருகன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று, தரிசனம் செய்தனா்.

சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, முருகன் சந்நிதி உள்ளிட்ட அனைத்து சுவாமிகளின் சந்நிதிகள் புனரமைக்கப்பட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், ஆக.30-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிக்குழுவினா் முடிவு செய்தனா்.

இதைத்தொடா்ந்து சனிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து பல்வேறு ஹோமங்கள் செய்யப்பட்டு, பூா்ணாஹுதி, தீபாராதனைகள், வழிபாடுகள் நடைபெற்றன. சனிக்கிழமை மாலை முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து மகா பூா்ணாஹுதி, தீபாராதனைக்குப் பின்னா், யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடாகின. இதைத்தொடா்ந்து முருகன் சந்நிதி உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளின் கோபுரக் கலசங்களுக்கு சிவாச்சாரியாா்கள் புனிதநீா் ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தினா். இதன் பின்னா் சுவாமிக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.

கும்பாபிஷேகத்தில் மூங்கில்பட்டு, சிங்காரப்பேட்டை மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளைத் திருப்பணிக் குழுவினா், கிராம மக்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.