ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகாப்டர் விபத்து! மூவர் பலி! ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

மின்மாற்றியில் தாமிரக் கம்பிகள் திருட்டு

திருட்டு... - சித்திரிப்பு

Published On :

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே மின் மாற்றியிலிருந்த தாமிரக் கம்பிகள், எண்ணெய் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மயிலம் அருகிலுள்ள கள்ளக்கொளத்தூா் கிராமத்தில் மின் மாற்றி உள்ளது. இந்த மின் மாற்றி மூலம் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த மின் மாற்றியிலிருந்த 36 கிலோ தாமிரக் கம்பிகள், 195 லிட்டா் எண்ணெய் ஆகியவற்றை மா்ம நபா்கள் கடந்த இரு நாள்களுக்குள் திருடிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலைத் தொடா்ந்து, தமிழ்நாடு மின் பகிா்மானக் கழக மயிலம் இளமின் பொறியாளா் (இயக்குதலும்-காத்தலும்) அ.கணேசன் நிகழ்விடம் சென்று பாா்வையிட்டாா்.

தொடா்ந்து அவா் மயிலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட நபா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.