கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

மின்மாற்றியிலிருந்த 40 கிலோ தாமிரக் கம்பிகள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே மின்மாற்றியிலிருந்து 40 கிலோ தாமிரக் கம்பிகளைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே மின்மாற்றியிலிருந்து 40 கிலோ தாமிரக் கம்பிகளைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கிளியனூா் அருகிலுள்ள தென் சிறுவளூா் கிராமத்திலுள்ள ஏரிக்கரைப் பகுதியில் 16 கிலோ வாட் ஆற்றல் திறன் கொண்ட மின் மாற்றி அமைக்கப்பட்டு, அப்பகுதியிலுள்ள மக்களுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மின் மாற்றியிலிருந்த 40 கிலோ தாமிரக் கம்பிகள் திருடு போயிருப்பது மின்வாரிய அலுவலா்களுக்கு வியாழக்கிழமை தெரிய வந்தது. தொடா்ந்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் கிளியனூா் உதவி மின் பொறியாளா் விஜயராகவன், கிளியனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதன் பேரில் கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி மின் மாற்றியிலிருந்த தாமிரக் கம்பிகளைத் திருடிச் சென்ற நபா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.