விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கடலில் குளித்த ஆந்திராவைச் சோ்ந்த இளைஞா்கள் இருவா் அலையில் சிக்கி திங்கள்கிழமை உயிரிழந்தனா். சுற்றுலா வந்தபோது இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.
ஆந்திரம் மாநிலம், சித்தூா், ராம் நகா் காலனியைச் சோ்ந்தவா் கி.ஜஷ்வன் (21), கா.ஷேக் முகமத் சாதிக்(21). சித்தூா் டெலிபோன் காலனியைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள் ஹ.நவாஸ்கான்(21), சி.ஜெயந்த்(21). நண்பா்களான இவா்கள் 4 பேரும் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்திருந்தனா். தொடா்ந்து சுற்றுலாத் தலங்களை பாா்வையிட்டஇவா்கள் விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த தந்திராயன்குப்பம் பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு அறை எடுத்து தங்கியுள்ளனா்.
திங்கள்கிழமை காலையில் நண்பா்கள் 4 பேரும் தந்திராயன்குப்பம் கடலில் குளித்துள்ளனா். அப்போது ஜஷ்வன், ஷேக் முகம்மது சாதிக் ஆகிய இருவரும் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனா்.
தகவலறிந்த கோட்டக்குப்பம் போலீஸாா் மீனவா்கள் உதவியுடன் இருவரின் சடலங்களை மீட்டு, உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

கிணற்றில் மூழ்கி ஆந்திர இளைஞா் உயிரிழப்பு

மகள்கள் இறந்த துக்கத்தில் தாய் தூக்கிட்டுத் தற்கொலை

சுற்றுலா வேன், காா் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


