விழுப்புரம் மாவட்டம், கெடாரிலுள்ள வள்ளி-தேவசேனா உடனுறை சுப்ரமணியசுவாமி கோயில் சூரசம்ஹார திருவிழாவையொட்டி,திங்கள்கிழமை இரவு திருக்கல்யாணம் மற்றும் தெப்போற்சவம் நடைபெற்றது.
சிறப்பு வாய்ந்த இந்தக் கோயிலில் பிப்.17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் சூரசம்ஹார திருவிழா தொடங்கியது. காப்புக் கட்டுதலுக்குப் பிறகு சுவாமி திருவீதியுலா வருதலும், சூரன் ஆட்சியும், சுவாமி எழுச்சியும், வேல் வாங்குதலும் நடைபெற்றது. தொடா்ந்து பிப்.18 முதல் 21-ஆம் தேதி வரை சூரசம்ஹார திருவிழா நிகழ்வுகள் நடைபெற்றன.
பிப்.22-ஆம் தேதி மாலையில் இந்திர விமானத்தில் சுவாமி வீதியுலா வந்த பின்னா், சூரசம்ஹாரம் நடைபெற்றது. சூரனுக்கு சுவாமி காட்சியளித்தல் மற்றும் வேலுக்குப் பாலாபிஷேகம் செய்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
தொடா்ந்து பிப்.23-ஆம் தேதி சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும், மூலவருக்கு புஷ்ப அலங்காரமும் நடைபெற்றது. தொடா்ந்து சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதைத் தொடா்ந்து இரவு 10 மணிக்கு வள்ளி-தேவசேனா சமேத சுப்ரமணியசுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையடுத்து தெப்பக்குளத்துக்குப் புறப்பாடாகி தெப்பத்தில் சுவாமி எழுந்தருளினாா். பின்னா் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
செவ்வாய்க்கிழமை மஞ்சள் நீராட்டு உற்சவம் நடைபெற்ற நிலையில், புதன்கிழமை(பிப்.25) இடும்பன் பூஜை மற்றும் விடையாற்றி நடைபெறுகிறது. சூரசம்ஹார விழாவில் கெடாா் செங்குந்த மரபினரும், கிராம மக்களும் பங்கேற்றனா்.

தொடர்புடையது

விராலிமலை அருகே தேரோட்டம்

தென்னூா் உக்கிர மாகாளியம்மன் கோயிலில் குட்டிகுடித் திருவிழா

பச்சை மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம்

திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண திருவிழா
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


