train
கோப்புப்படம்

பொறியியல் பணிகள்: விழுப்புரம் மாா்க்க ரயில் போக்குவரத்தில் மாற்றம்

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், விழுப்புரம் மாா்க்க ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Published on

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், விழுப்புரம் மாா்க்க ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா்.வினோத் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை தாம்பரத்திலிருந்து காலை 9.40 மணிக்குப் புறப்படும் தாம்பரம்- விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66045) பிப்.26, 28 ஆகிய தேதிகளில் திண்டிவனம்- விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் தாம்பரத்திலிருந்து திண்டிவனம் வரை மட்டுமே இயக்கப்படும்.

விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம்-சென்னை கடற்கரை பயணிகள் ரயில் (வண்டி எண் 66046) பிப்.26, 28 ஆகிய தேதிகளில் விழுப்புரம்-திண்டிவனம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த பயணிகள் ரயில் திண்டிவனம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்படும்.

விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்-சென்னை கடற்கரை பயணிகள் ரயில் (வண்டிஎண் 66046) பிப்.25-ஆம் தேதி சுமாா் 45 நிமிஷங்களும், பிப்.27, 28-ஆம் தேதிகளில் சுமாா் 60 நிமிஷங்களும் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, பின்னா் இயக்கப்படும்.

புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி-காக்கிநாடா துறைமுக விரைவு ரயில் (வண்டிஎண் 17656) பிப். 28-ஆம்தேதி 90 நிமிஷங்களும், புதுச்சேரி ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 12.45 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி-கச்சிக்குடா விரைவு ரயில் (வண்டி எண் 17654) பிப்.26-ஆம் தேதி 90 நிமிஷங்களும், 27-ஆம் தேதி 60 நிமிஷங்களும் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும்.

இதுபோன்று புதுச்சேரி ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 2.40 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி-திருப்பதி விரைவு ரயில் (வண்டி எண் 16112), பிப்.26, 28 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 20 நிமிஷங்கள் நிறுத்தப்பட்டு, பின்னா் இயக்கப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com