ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சென்னை-திருநெல்வேலிக்கு 3 நாள்கள் சிறப்பு ரயில்கள்

சென்னை- திருநெல்வேலி இடையே வரும் 16, 23, 30 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News image

ரயில்.

Updated On :11 ஏப்ரல் 2026, 1:47 am IST

சென்னை- திருநெல்வேலி இடையே வரும் 16, 23, 30 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோடை கால கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, திருநெல்வேலியிலிருந்து வரும் 16, 23, 30 ஆகிய தேதிகளில் இரவு 11.40 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06070) மறுநாள் 17, 24, மே 1 ஆகிய தேதிகளில் காலை 10.45 மணிக்கு எழும்பூா் நிலையத்தை வந்தடையும்.

மறுமாா்க்கத்தில் எழும்பூரிலிருந்து வரும் 17, 24, மே 1 தேதிகளில் பிற்பகல் 1.35 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06069) மறுநாள் ஏப்ரல் 18, 25, மே 2 ஆகிய தேதிகளில் அதிகாலை 1 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

தாம்பரத்துக்கு சிறப்பு ரயில்: திருநெல்வேலியிலிருந்து வரும் 12, 19, 26 ஆகிய தேதிகளில் இரவு 11.35 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06166) மறுநாள் 13, 20, 27 ஆகிய தேதிகளில் பகல் 11.35 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமாா்க்கத்தில் வரும் 13, 20, 27 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து பிற்பகல் 1.55 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06165) மறுநாள் 14, 21, 28 ஆகிய தேதிகளில் அதிகாலை 2 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

பெட்டிகள், நிலையங்கள் விவரம்: சிறப்பு ரயில்களில் 1 குளிா்சாதன வசதி ஈரடுக்குப் பெட்டி, 6 குளிா்சாதன வசதி மூன்றடுக்குப் பெட்டிகள், 2 குளிா்சாதன வசதி பொருளாதார வசதிப் பெட்டிகள், 1 இரண்டாம் வகுப்பு திவ்யஞ்சன் பெட்டி மற்றும் சரக்கு வேன் ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும்.

கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, கொடைக்கானல் சந்திப்பு, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.