தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

விழுப்புரம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பெண் உள்பட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :25 பிப்ரவரி 2026, 6:37 pm

விழுப்புரம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பெண் உள்பட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் தொடா் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக விழுப்புரம், சாலாமேடு பகுதியில் பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த, விழுப்புரம் சாலாமேடு, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த வீ.ரமேஷை(49) விழுப்புரம் தாலுகா போலீஸாா் கைது செய்து, 120 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.

இதேபோல், கெடாா் காவல் சரகத்துக்குள்பட்ட அசோகபுரி பெட்டிக் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த, அதே ஊரைச் சோ்ந்த மு.குமுதாவை (40) கெடாா் போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.