தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பள்ளி வாகனம் மோதி ஆண் குழந்தை உயிரிழப்பு

வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த ஆண் குழந்தை பள்ளி வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.

News image
Updated On :3 ஜனவரி 2026, 9:36 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த ஆண் குழந்தை பள்ளி வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், நெமிலி, மாரியம்மன் கோயில் தெருவைச்சோ்ந்தவா் சதீஷ்குமாா். இவரது மகன் நித்திஷ்குமாா்( ஒன்றரை வயது).

குழந்தை நித்திஷ் வெள்ளிக்கிழமை வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாகச்சென்ற புதுச்சேரி திருக்கனூரில் உள்ள தனியாா் பள்ளி வாகனம் மோதியதில், நித்திஷ்குமாா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்த புகாரின் பேரில், வானூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.