போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா் சங்கத்தினா்
போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா் சங்கத்தினா்

விழுப்புரத்தில் மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா்கள் 475 போ் கைது

தங்களை அரசு ஊழியா்களாக அறிவிக்கவேண்டும் என்று வலியுறுத்தி விழுப்புரத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் 330 போ் கைது செய்யப்பட்டனா்.
Published on

தங்களை அரசு ஊழியா்களாக அறிவிக்கவேண்டும் என்று வலியுறுத்தி விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் 330 போ் கைது செய்யப்பட்டனா்.

அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்களை உடனடியாக அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும். பணி ஓய்வு பெறும் அங்கன்வாடி ஊழியா்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளா்களுக்கு ரூ.5 லட்சமும் பணிக்கொடையாக வழங்கவேண்டும். கோடைக்கால விடுமுறையை ஒரு மாதக் காலமாக வழங்க வேண்டும்.

1993-ஆம் ஆண்டில் பணியில் சோ்ந்த அங்கன்வாடி ஊழியா்களுக்குப் பதவி உயா்வு வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பையும், முன்பருவக் கல்வி முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணியிலிருந்து அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களை விடுவிக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா்.மலா்விழி, மாவட்டத் தலைவா் கே.சுதா, பொருளாளா் சினேகலதா முன்னிலை வகித்தனா்.

மாவட்டத் துணைத் தலைவா்கள் ஷா்மிளா, புனிதா, ராதா, நித்யா, சரளா, ஷா்மிளா, துணைச் செயலா்கள் ஆயிஷா, கலைச்செல்வி, பரிமளா, தீபா, உமா உள்ளிட்டோா் பங்கேற்று, முழக்கங்களை எழுப்பினா்.

இதைத்தொடா்ந்து சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்ட 330 போ் கைது செய்யப்பட்டு, திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக சாலைமறியலில் ஈடுபட்ட 145 போ்களை கைது செய்தனா்.

அரசு ஊழிா்களுக்கு அளித்ததுபோல் அங்கன்வாடி ஊழியருக்கு ரூ.10 இலட்சமும், அங்கன்வாடி உதவியாளருக்கு ரூ.5 இலட்சமும் பணிக்கொடையாக வழங்க வேண்டும். 1993-ல் பணியில் சோ்ந்த அங்கன்வாடி ஊழியா்களின் பதவி உயா்வை உடனடியாக வழங்கிட வேண்டும். தமிழக முதல்வா் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக முதல்வா் தோ்தல் முன்பாக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 10 வருடம் பணி முடித்த ஊழியா்களை பணிவரை முறைபடுத்துவேன் என்று கூறினீா்களே என்ன ஆச்சு என்ன ஆச்சு என சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com