பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: இளைஞா் உயிரிழப்பு
விக்கிரவாண்டி அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில், பைக்கில் பயணித்த இளைஞா் உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி வட்டம், பூண்டி திருக்குறிப்பு தொண்டா் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் அஜித்குமாா்(18). பூண்டி பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் ரா.விக்னேஷ்(20). நண்பா்களான இவா்கள் இருவரும் புதன்கிழமை பூண்டி பகுதியில் பைக்கில் சென்றுள்ளனா். விக்னேஷ் பைக்கை ஓட்டினாா். அப்போது பைக் மீது எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியது.
விபத்தில் பலத்த காயமடைந்த அஜித்குமாா், விக்னேஷ் ஆகிய இருவருரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதில் அஜித்குமாா் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். விக்னேஷ் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கஞ்சனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
