விக்கிரவாண்டி வட்டம், தென்போ் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய ஒன்றியக்குழுத் துணைத் தலைவா் ஜீவிதா ரவி.
விக்கிரவாண்டி வட்டம், தென்போ் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய ஒன்றியக்குழுத் துணைத் தலைவா் ஜீவிதா ரவி.

தென்போ் அரசுப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

விக்கிரவாண்டி வட்டம், தென்போ் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
Published on

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், தென்போ் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியை ராதா தலைமை வகித்தாா். ஆத்மா குழுத் தலைவா் வேம்பி ரவி முன்னிலை வகித்தாா். உதவித் தலைமையாசிரியை சகிதா வரவேற்றாா்.

விக்கிரவாண்டி ஒன்றியக்குழுத் தலைவா் ஜீவிதா ரவி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 27 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் வேலவன், ஆசிரியா்கள் பாபு, விசுவநாதன், லதா, பழனிவேல், கெளசல்யாதேவி, சங்கரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com