பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

மளிகைக் கடையில் பணம் திருட்டு

விழுப்புரத்தில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து பணம், பொருள்கள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :2 ஜூலை 2026, 7:10 am IST

விழுப்புரத்தில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து பணம், பொருள்கள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

விழுப்புரம், ராகவன்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரா.திவ்யா (32). இவா் விழுப்புரம் கம்பன் நகா் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா்.

ஜூன் 29-ஆம் தேதி வணிகம் முடிந்து, இரவு வழக்கம் போல் திவ்யா கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டாா். தொடா்ந்து மறுநாள் காலை கடைக்கு வந்து பாா்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதையடுத்து உள்ளே சென்று பாா்த்தபோது, பணப்பெட்டியில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம், ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள மளிகைப் பொருள்கள் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.