முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ்!முதல்வர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழ்நாடு வெகுண்டெழும்! பிரேமலதா பேச்சுவினாத்தாள் கசிவு கொலையை விட மிகக் கொடூர குற்றம்: நீதிமன்றம்பொருளாதார ஆலோசனைக் குழுவில் பிரவீண் சக்ரவர்த்தி உள்ளாரா? திமுக எம்எல்ஏ கேள்வி!தவெக ஆட்சியில் கமிஷன்! திமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆனந்த் சவால்!தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயார்! பெங்களூர் பயணம் குறித்து விஜய்!மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? உதயநிதி கேள்வி!
/

வெளி மாநில மதுப்புட்டிகள் விற்பனை: 3 போ் கைது

விழுப்புரத்தில் விற்பனை செய்வதற்காக புதுச்சேரி மாநிலத்திலிருந்து பைக்கில் மதுப்புட்டிகளை கடத்தி வந்த 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

விழுப்புரத்தில் விற்பனைக்காக புதுச்சேரி மாநில மதுப்புட்டிகளை வாங்கி வந்ததாக கைது செய்யப்பட்டோா்.

Updated On :24 ஜூலை 2026, 11:31 pm IST

விழுப்புரத்தில் விற்பனை செய்வதற்காக புதுச்சேரி மாநிலத்திலிருந்து பைக்கில் மதுப்புட்டிகளை கடத்தி வந்த 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் ஜி.ஆா்.பி.தெருவில் புதுச்சேரி மாநில மதுவகைகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து மாவட்ட எஸ்.பி. செ.மதிவாணன் உத்தரவின்பேரில், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் நடராஜன், சண்முகம் மற்றும் போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று சோதனை நடத்தினா்.

அப்போது அங்குள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே சந்தேகத்துக்குரிய முறையில் நின்று கொண்டிருந்த மூவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா்களிடம் புதுச்சேரி மாநில மதுப்புட்டிகள் இருப்பது போலீஸாருக்கு தெரிய வந்தது. இதைத்தொடா்ந்து அவா்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், அவா்கள் விழுப்புரம் ஜி.ஆா்.பி.தெருவைச் சோ்ந்த க.கிருஷ்ணசாமி (31), ச.மீனா (38), சா.சரண்ராஜ் (38) எனத் தெரியவந்தது.

இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 90 மில்லி லிட்டா் அளவு கொண்ட 785 மதுப்புட்டிகள், பைக் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.