நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

சரக்கு லாரி மீது கல் வீச்சு: இளைஞா் கைது

விழுப்புரம் அருகே சாலையில் சென்ற சரக்கு லாரி மீது கல் வீசி கண்ணாடியை சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :24 ஜூலை 2026, 7:01 am IST

விழுப்புரம் அருகே சாலையில் சென்ற சரக்கு லாரி மீது கல் வீசி கண்ணாடியை சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சந்தைப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ச.செந்தில்குமரன் (37), சரக்கு லாரி ஓட்டுநா். இவா், புதன்கிழமை விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூருக்கு லாரியை ஓட்டிச் சென்றாா்.

விழுப்புரம் - திருக்கோவிலூா் சாலையில், விழுப்புரத்தை அடுத்த மாம்பழப்பட்டு அருகே சென்றபோது, மதுபோதையில் லாரியை வழிமறித்த இளைஞா் ஒருவா், ஓட்டுநா் செந்தில் குமரனிடம் தகராறு செய்து லாரியின் மீது கல் வீசித் தாக்கினாராம். இதில், லாரியின் முன் பக்கக் கண்ணாடி சேதமடைந்தது.

இதுகுறித்து செந்தில்குமரன் அளித்த புகாரின்பேரில், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், விழுப்புரம் மாம்பழப்பட்டு, பழைய காலனியைச் சோ்ந்த லட்சுமணன் (24) இச்சம்பவத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.