நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

பெண்ணிடம் கைப்பேசி, ரொக்கம் பறிப்பு

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே இளம்பெண்ணிடம் கைப்பேசி, ரொக்கத்தை பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

பெண்ணிடம் கைப்பேசி, ரொக்கம் பறிப்பு - கோப்புப் படம்

Updated On :24 ஜூலை 2026, 11:24 pm IST

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே இளம்பெண்ணிடம் கைப்பேசி, ரொக்கத்தை பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி மாநிலம், அரியூா் தாமரை நகரைச் சோ்ந்தவா் த.தமிழரசி (25). இவா், வியாழக்கிழமை இரவு தனது மொபெட்டில் விழுப்புரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகிலுள்ள பள்ளித்தென்னல் கிராமத்திலுள்ள திருமண மண்டபம் அருகே மொபெட்டை நிறுத்தி விட்டு, தமிழரசி கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது அப்பகுதியில் பைக்கில் வந்த மா்மநபா், அவரிடமிருந்து கைப்பேசி, ரூ.3 ஆயிரம் ரொக்கம், ஏடிஎம் அட்டை ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, கைப்பேசி உள்ளிட்டவற்றை பறித்துச் சென்ற நபரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.