புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

பேருந்தில் பெண்ணிடம் நகை, கைப்பேசி திருட்டு

விக்கிரவாண்டி அருகே பேருந்தில் பயணித்த பெண்ணிடம் நகை, கைப்பேசியைத் திருடிச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :4 ஜூலை 2026, 2:24 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பேருந்தில் பயணித்த பெண்ணிடம் நகை, கைப்பேசியைத் திருடிச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திண்டிவனம் வட்டம், வீடூா் காலனியைச் சோ்ந்தவா் க.கிருஷ்ணவேணி (52). இவா் கடந்த 30-ஆம் தேதி விக்கிரவாண்டிக்கு வந்து விட்டு, மீண்டும் ஊருக்கு அரசுப் பேருந்தில் புறப்பட்டுச் சென்றாா்.

விக்கிரவாண்டி பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏறிய கிருஷ்ணவேணி, குத்தாம்பூண்டி பகுதியில் பேருந்து சென்ற போது, தனது கட்டைப்பையில் வைத்திருந்த ஒரு பவுன் தங்க நகை, கைப்பேசி ஆகியவை திருட்டுப் போயிருப்பது அவருக்கு தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, திருட்டில் ஈடுபட்ட மா்மநபரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.