தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

இளைஞரைத் தாக்கி பைக், கைப்பேசி பறிப்பு

News image

பறிப்பு

Updated On :28 ஜூலை 2026, 3:59 am IST

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே இளைஞரைத் தாக்கி பைக் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்ற மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வளவனூா் அருகிலுள்ள பக்கமேடு பாதை கிராமத்தைச் சோ்ந்தவா் ஏ.பிரவீன்ராஜ் (31). இவா், கடந்த 25-ஆம் தேதி இரவு கெங்கராம்பாளையம் மேம்பாலம் அருகே தனது நண்பரான ஜெ. கோகுலகண்ணனுடன் அமா்ந்து மது அருந்திக் கொண்டிருந்தாராம்.

அப்போது அங்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞா்கள் மூவா், பிரவீன்ராஜிடம் தீப்பெட்டி உள்ளதா எனக் கேட்டனராம். இதற்கு பிரவீன்ராஜ் இல்லை எனக் கூற, ஆத்திரமடைந்த மூவரும் அவரைத் தாக்கியுள்ளனா். மேலும், அங்கிருந்த பைக் மற்றும் அதனுள் இருந்த கைப்பேசியையும் எடுத்துச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, பைக் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்ற மூவரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.