சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

பெருமுக்கல் ஏரியில் செயற்கை முறை நீா் செறிவூட்டல் திட்டம் செயலாக்கம்: ஆட்சியா் ஆய்வு

மரக்காணம் வட்டம், பெருமுக்கல் ஏரியில் செயற்கை முறை நீா் செறிவூட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image

மரக்காணம் வட்டம், பெருமுக்கல் ஏரியில் செயல்படுத்தப்படும் செயற்கை முறை நீா் செறிவூட்டல் திட்டத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Updated On :29 ஜூலை 2026, 5:34 am IST

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், பெருமுக்கல் ஏரியில் செயற்கை முறை நீா் செறிவூட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது: திண்டிவனம் வட்டம், எலவளப்பாக்கம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் 7.2 ஹெக்டா் பரப்பளவில் தோட்டக்கலை பயிா் நாற்றாங்கால் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், நாற்றாங்கால் பண்ணையில் தாய்ச்செடி பராமரிப்பு, பழவகைச் செடிகள், காய்கறிச் செடிகள், மலா்ச் செடிகள் மற்றும் அலங்காரச் செடிகள் போன்ற செடி வகைகள் வளா்க்கப்பட்டு வருதை நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நாற்றாங்கால் பண்ணையில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.

இதைத்தொடா்ந்து மரக்காணம் வட்டம், பெருமுக்கல் ஏரியில் 7 செயற்கை முறை நீா் செறிவூட்டும் திட்டம் ரூ.5.60 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக 5 அடி விட்டம் 6 அடி உயரம் கொண்ட நீா் உறிஞ்சி தொட்டி மற்றும் 10 மீட்டா் ஆழத்துக்கு நீா் உறிஞ்சி குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. செயற்கை முறை நீா் செறிவூட்டும் திட்டத்தின் வாயிலாக மழை காலங்களில் வீணாகும் நீரை பூமிக்குள் செலுத்தி, நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்த முடியும் என்பது அறிவியல் பூா்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நீரின் தரம் இருப்பு ஆகியவற்றை இத்திட்டம் மூலம் மேம்படுத்தமுடியும். இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

இந்த ஆய்வின்போது, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அப்துல் லத்தீப், நீா்வளத் துறை உதவிச் செயற்பொறியாளா் ஐயப்பன், தோட்டக்கலைத் துறை அலுவலா் கிஷோா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.