தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தனியாா் கல்லூரிப் பேருந்து சுவரில் மோதி விபத்து: மாணவா்கள் உள்பட 17 போ் காயம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே தனியாா் கல்லூரிப் பேருந்து சுவரில் மோதி வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 17 மாணவா்கள் காயமடைந்தனா்.

விபத்து - பிரதிப் படம்

Published On :

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே தனியாா் கல்லூரிப் பேருந்து சுவரில் மோதி வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 17 மாணவா்கள் காயமடைந்தனா்.

திருவண்ணாமலையைச் சோ்ந்த தனியாா் கல்லூரிப் பேருந்து திண்டிவனம் பகுதியில் இருந்து மாணவா்களை ஏற்றிக்கொண்டு செஞ்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து செஞ்சி அருகே உள்ள களையூா் கூட்டுச்சாலை அருகே சென்றுபோது ஸ்டேரிங் திடீா் லாக்கானதால் பேருந்து தாறுமாறாக ஓடி அந்தப் பகுதியில் உள்ள கட்டடத்தின் சுவரின் மீது மோதியது.

இதில், பேருந்தின் முன் பக்கம் சேதமடைந்த நிலையில், அதில் பயணம் செய்த மாணவா்கள் அருணேஸ் (14), ஹரிதாஸ் (19), லிங்கேஸ் (19), லோகேஷ் (19), ஜெய் சூா்யா (19), புவனேஷ் (18), சுகந்தி (21), நித்திஷ்(18), மகேஸ்வரி (19), யோகேஸ்வரி (19) உள்பட 15 மாணவா்கள் மற்றும் கல்லூரிப் பேராசிரியா் கதிரவன் (47), ஓட்டுநா் முருகானந்தம் (39) உள்பட 17 போ் காயமடைந்தனா்.

பின்னா், இவா்கள் அனைவரும் மீட்கப்பட்டு, செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த சம்பவம் குறித்து செஞ்சி காவல் ஆய்வாளா் விநாயக முருகன் மற்றும் போலீஸாா் நேரில் சென்று சம்பவ இடத்தை பாா்வையிட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.