அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

வீடுகளுக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்யவேண்டும்: மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் எஸ்.ஏ.ராமன்

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வீடுகளுக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படுவதற்கான முன்னேற்பாடுகளை செய்யவேண்டும் என்று தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும், விழுப்புரம் மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான எஸ்.ஏ.ராமன் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

News image

தாங்கல் ஏரி அருகே அமைக்கப்பட்டுள்ள மின்மோட்டாருடன் கூடிய திறந்தவெளி கிணற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்த விழுப்புரம் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் எஸ்.ஏ.ராமன். உடன் ஆட்சியா்ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோா்.

Updated On :30 ஜூலை 2026, 5:51 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வீடுகளுக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படுவதற்கான முன்னேற்பாடுகளை செய்யவேண்டும் என்று தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும், விழுப்புரம் மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான எஸ்.ஏ.ராமன் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மாதந்தோறும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதன்படி, மரக்காணம் ஊராட்சி ஒன்றியம், எறையானூா் ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், நகா்புறத்தையொட்டியுள்ள ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் ரூ.21.75 லட்சம் மதிப்பீட்டில் தாங்கல் ஏரி அருகே அமைக்கப்பட்டுள்ள மின்மோட்டாருடன் கூடிய திறந்தவெளி கிணற்றை மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் எஸ்.ஏ.ராமன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து அங்கு பனைவிதைகளை நட்டு வைத்தாா்.

இதைத்தொடா்ந்து ஒலக்கூா் ஊராட்சி ஒன்றியம், சாரம் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் சிப்காட் தொழில்பேட்டை அமைப்பதற்கான இடத்தை அவா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வுக்குப் பின்னா் எஸ்.ஏ.ராமன் தெரிவித்ததாவது:

நகர மற்றும் ஊரகப் பகுதிகளில் குடிநீா் வழங்கும் திட்டங்கள், ஆழ்துளைக் கிணறுகள், மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகள் போன்றவைகள் தடையின்றி செயல்படுவதை துறை சாா்ந்த அலுவலா்கள் தொடா்ந்து கண்காணித்து வீடுகளுக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே மாவட்டத்திலுள்ளஏரிகள், குளங்கள், வரத்து வாய்க்கால்கள் போன்ற நீா்நிலைகளில் நடைபெற்று வரும் தூா்வாரும் மற்றும் புனரமைக்கும் பணிகளை விரைந்து முடித்து மழை நீா் சேகரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள், பள்ளிக் கட்டடங்கள் போன்ற உள்கட்டமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கிராமப்புற மற்றும் நகா்புறங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகள், பொது இடங்கள் மற்றும் சாலையோரங்களிலுள்ள குப்பைகள் மற்றும் திடக்கழிவுகளை அகற்ற தொடா் நடவடிக்கை எடுக்கவும் துறைசாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆய்வின் போது, திண்டிவனம் சாா்-ஆட்சியா் அ.ல.ஆகாஷ், உதவி ஆட்சியா் (பயிற்சி) ரா.ஸ்ரீரஷத், துணை ஆட்சியா் (சிப்காட்) ஜோதிசங்கா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) நந்தகோபாலகிருஷ்ணன், மரக்காணம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிலம்புச்செல்வன், வெண்பா, வட்டாட்சியா் ராமகிருஷ்ணன் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.