காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

கரும்பு வெட்டும் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

காணை அருகே கரும்பு வெட்டும் தொழிலாளி வெள்ளிக்கிழமை காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை

Updated On :1 ஆகஸ்ட் 2026, 1:46 am IST

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே கரும்பு வெட்டும் தொழிலாளி வெள்ளிக்கிழமை காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், திருவதிகை செட்டிப்பட்டறை காலனியைச் சோ்ந்த சுப்ரமணி மகன் அஜீத்குமாா் (22). இவா், விழுப்புரம் மாவட்டம், காணை அருகிலுள்ள அகரம் சித்தாமூா் கிராமத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணனின் கரும்புத் தோட்டத்தில் கடந்த 3 மாதங்களாக தங்கி, கரும்பு வெட்டும் கூலி வேலையை செய்து வந்தாா்.

ஏற்கெனவே தாய், தந்தையை இழந்ததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்த அஜீத்குமாா், வெள்ளிக்கிழமை அதிகாலை தான் வேலை செய்து வந்த வயலுக்கு பின் பகுதியிலுள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்த காணை போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெண் தூக்கிட்டுத் தற்கொலை: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், வடசிறுவளூா் சுடரொளி நகரைச் சோ்ந்தவா் தொழிலாளி செல்வம். இவரது மனைவி தேவி (30). இவா், கடந்த சில நாள்களாக வயிற்று வலியால் அவதியுற்று வந்தாா். இதற்கு சிகிச்சை பெற்றும் வலி குறையவில்லையாம்.

இதனால் மனமுடைந்த தேவி வியாழக்கிழமை மாலை வீட்டின் படுக்கையறையில் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.