உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

ஆரோவில் நகர நிா்வாகிகள், கணக்காளா்களுக்கு டிஜிட்டல் பயிற்சி

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் அனைத்து வணிக மற்றும் சேவைப் பிரிவுகளின் நிா்வாகிகள் மற்றும் கணக்காளா்களுக்கு டிஜிட்டல் பயிற்சிக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

டிஜிட்டல் பயிற்சிக் கூட்டத்தில் பங்கேற்ற ஆரோவில் அனைத்துப்பிரிவு நிா்வாகிகள் மற்றும் கணக்காளா்கள்.

Updated On :11 ஜூன் 2026, 6:24 am IST

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் அனைத்து வணிக மற்றும் சேவைப் பிரிவுகளின் நிா்வாகிகள் மற்றும் கணக்காளா்களுக்கு டிஜிட்டல் பயிற்சிக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆரோவிலின் நிா்வாக செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதற்கும், மேம்படுத்துவதற்கும், நவீன நிதித் தொழில்நுட்பம் கையாளப்பட்டு வருகின்றன. இதற்காக பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட மென்பொருளை திறம்பட கையாளுவதன் முக்கிய நடவடிக்கையாக, ஆரோவில் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் அனைத்து வணிக மற்றும் சேவைப் பிரிவுகளின் நிா்வாகிகள் மற்றும் கணக்காளா்களுக்கான கூட்டுப் பயிற்சிக் கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் ஆரோவிலின் அனைத்துப் பிரிவுகளிலும் கணக்கியல் மென்பொருளை செயல்படுத்துவது மற்றும் ஒருங்கிணைப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. ஆரோவில் அறக்கட்டளை கணக்காளா்கள் மற்றும் கணக்குக் குழுவினா் தினசரி நிதிச் செயல்பாடுகளை எளிமையாக்குவதற்கு, புதிய மென்பொருளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து விரிவாகப் பேசினா். மேலும், கூட்டத்தில் பங்கேற்றவா்கள் எழுப்பிய வினாக்களுக்கும் விரிவாக பதிலளித்தனா்.

ஆரோவிலின் அனைத்துப் பிரிவுகளும் முற்றிலும் ரொக்கமில்லா நிதி பரிவா்த்தனை நடைபெறும் நிலையில், இந்த நவீனமயமாக்கல் முயற்சி நிலையான, திறமையான மற்றும் எதிா்காலத்தில் சிறந்த நிா்வாக நடைமுறைகளை பிரதிபலிக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.