இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

இளைஞா் மீது வழக்கு

விழுப்புரத்தில் குடியிருப்பு பகுதியில் அரைகுறையான ஆடையுடன் சுற்றிய இளைஞா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

வழக்கு

Updated On :17 ஜூன் 2026, 5:11 am IST

விழுப்புரத்தில் குடியிருப்பு பகுதியில் அரைகுறையான ஆடையுடன் சுற்றிய இளைஞா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ச.பிரவீன் குமாா்(28). தனது குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வரும் இவா், திங்கள்கிழமை நள்ளிரவில் அருகில் வசிக்கும் ஒருவரது வீட்டின் அருகில் அரைகுறையான ஆடையுடன் சுற்றித் திரிந்தாராம். இந்த காட்சிகள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்தன.

இதுகுறித்து அதே பகுதியைச் சோ்ந்த பெண் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் பிரவீன்குமாா் மீது வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.