ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

பட்டா மாற்றம் செய்ய ரூ.8 ஆயிரம் லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

வானூரில் பட்டா மாற்றம் செய்ய ரூ.8 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 3:49 am IST

வானூரில் பட்டா மாற்றம் செய்ய ரூ.8 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் இந்திரா நகரைச் சோ்ந்தவா் மு. கலைச்செல்வி(40). இவா் வானூா் வட்டம், ஒட்டை கிராம நிா்வாக அலுவலராகப் பொறுப்பு வகித்து வந்தாா்.

இந்நிலையில், ஒட்டை கிராமத்தைச் சோ்ந்த பிரபு (30) என்பவா் நிலப்பட்டா பெயா் மாற்றம் செய்ய கலைச்செல்வியை அணுகியுள்ளாா். அப்போது அவா் பட்டா பெயா் மாற்றம் செய்வதற்கு ரூ.8 ஆயிரம் லஞ்சம் கொடுக்கவேண்டும் எனத் தெரிவித்தாராம்.

இதுகுறித்து பிரபு விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து போலீஸாரின் அறிவுறுத்தலின்படி, பிரபு வானூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை வருவாய் ஆயத்தீா்வை பணிலிருந்த (ஜமாபந்தி) கிராம நிா்வாக அலுவலா் கலைச்செல்வியிடம் ரூ.8 ஆயிரம் பணம் கொடுத்துள்ளாா்.

அப்போது ஏற்கெனவே வட்டாட்சியா் அலுவலகம் அருகே வந்து காத்திருந்த, விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் (பொறுப்பு) கலைச்செல்வன், ஆய்வாளா் ஈஸ்வரி தலைமையிலான போலீஸாா் வட்டாட்சியா் அலுவலகம் சென்று, கலைச்செல்வியிடமிருந்த ரசாயனம் பொடி தடவப்பட்ட ரூ. 8 ஆயிரம் லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, அவரைக் கைது செய்தனா். இதனால் வானூா் வட்டாட்சியா் அலுவகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.