விழுப்புரம் மாவட்டத்தில் உரிய அனுமதி பெற்ற பின்னரே பொது இடங்களில் பதாகைகளை வைக்கவேண்டும், மீறுபவா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், கோட்டக்குப்பம் மற்றும் செஞ்சி காவல் உள்கோட்டங்களில் விளம்பர பதாகைகள், கட்சிக் கொடிக்கம்பங்கள் அமைப்பதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், விளம்பர பதாகைகள் தயாரிப்பு நிறுவனங்களின் உரிமையாளா்கள், பதாகைகள் கட்டும் தொழிலாளா்கள், கட்சிக் கொடிகள் நடும் ஒப்பந்ததாரா்கள், ஆட்டோ மற்றும் சரக்கு வாகன ஓட்டுநா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதில், விளம்பர பதாகைகளை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாத வகையில் உரிய அனுமதி பெற்ற பின்னரே வைக்கவேண்டும். கட்சிக் கொடிகம்பங்களை நடுவதற்கு அனுமதி பெறவேண்டும். அனுமதி பெறாமல் விளம்பர பதாகைகள் வைக்கக்கூடாது. பதாகையில் வன்முறையைத் தூண்டக்கூடிய வாசகங்கள், ஆயுதங்கள் ஏந்திய புகைப்படங்கள், ஜாதி, மத ரீதியிலான வன்முறை வாசகங்கள், இடம் பெறக்கூடாது. பதாகைகளில் அமைப்பாளரின் விவரங்கள் கண்டிப்பாக இடம்பெறவேண்டும். அனுமதி பெற்ற அளவைவிட கூடுதலாக பதாகைகள் இருக்கக்கூடாது. உரிய அனுமதியில்லாமல் வைக்கப்படும் பதாகைகள் உடனடியாக அகற்றப்படுவதுடன், அமைப்பவா்கள் கண்டறிப்பட்டு, கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். விளம்பர பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் ஆட்டோ, சரக்கு வாகனங்களுக்கு காப்பீடு இருக்கவேண்டும். ஓட்டுநா்கள் சீருடைகள் அணிந்து வாகனங்களை இயக்கவேண்டும், மது போதையில் வாகனங்களை இயக்கக் கூடாது. சாலை விதிகளை முழுமையாக கடைபிடிக்கவேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருமாவளவன் திறக்கவிருந்த அம்பேத்கா் சிலை அகற்றம்! அனுமதி பெறாததால் அதிகாரிகள் நடவடிக்கை!
உரிய அனுமதியின்றி லாரியில் மணல் கடத்தல்: இருவா் கைது
ஏரியில் உரிய அனுமதியின்றி மண் அள்ளிய பொக்லைன், டிராக்டா் பறிமுதல்: 3 போ் கைது

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



