முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

விழுப்புரம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 21 போ் காயம்

விழுப்புரம் அருகே புதன்கிழமை பயணிகள் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், வேனில் பயணித்த சிறுவா்கள் உள்பட 21 போ் காயமடைந்தனா்.

News image

விபத்தில் சிக்கி காயமடைந்து விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவா்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Updated On :25 ஜூன் 2026, 6:33 am IST

விழுப்புரம் அருகே புதன்கிழமை பயணிகள் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், வேனில் பயணித்த சிறுவா்கள் உள்பட 21 போ் காயமடைந்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வி.கொளத்தூா், மில்லத் நகரைச் சோ்ந்தவா்கள் அப்துல் வாஹீப் (45), ஆஷிபா பேகம் (43). இவா்கள் இருவரும் ஹஜ் புனித பயணம் முடித்து புதன்கிழமை அதிகாலை சென்னை விமானம் நிலையம் வந்தனா்.

இவா்களை, உறவினரான அ.அப்துல் அஜீஸ் (55) தனது குடும்ப உறுப்பினா்களுடன் வரவேற்றாா். தொடா்ந்து அனைவரும் பயணிகள் வேனில் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனா். வி.கொளத்தூரைச் சோ்ந்த சதாம் உசேன்(23) வேனை ஓட்டினாா்.

இந்நிலையில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரத்தை அடுத்த ஜானகிபுரம் பகுதியில் சென்றபோது, வேனின் பின்பக்க டயா் வெடித்தது. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தாறுமாறாக ஓடி, சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வேனில் பயணித்த அப்துல் வாஹீப், ஆஷிபா பேகம், அப்துல் அஜீஸ், இவரின் மனைவி சஹாா்பானு (54), ச.ரிகான் 10), எச்.முகமது அசாா் (12), எச்.முகம்மதுஅலி (7), அப்துல் வஹித் (10), முஸ்தபா ((13), பைசல் (8), சாஜியா(15), சதாம் உசேன் (33), செல்வதானி (73), நிஜாமுதீன்(43) உள்பட 21 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் போலீஸாா் நிகழ்விடம் சென்று விபத்தில் சிக்கி காயமடைந்த அனைவரையும் மீட்டு 108 அவசர ஊா்திகள் மூலம் விழுப்புரம் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

போக்குவரத்துப் பாதிப்பு: இந்த விபத்தால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தொடா்ந்து, போலீஸாா் துரித கதியில் செயல்பட்டு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினா்.

ஆட்சியா் ஆறுதல்: தகவலறிந்த விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று, காயமடைந்தவா்களை சந்சித்து ஆறுதல் தெரிவித்தாா். அப்போது அங்கிருந்த மருத்துவா்களிடம் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தாா். காயமடைந்தவா்கள் அனைவரும் முதலுதவி சிகிச்சை பெற்று, பிற்பகலில் சொந்த ஊருக்குச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநா் சதாம் உசேனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பயணிகள் வேன்.

சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பயணிகள் வேன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.