சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

சிறுவனைத் தாக்கி சூடு வைத்த 3 போ் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே சிறுவனைத் தாக்கி சூடு வைத்ததாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

பிரதிப் படம்

Updated On :26 ஜூன் 2026, 6:47 am IST

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே சிறுவனைத் தாக்கி சூடு வைத்ததாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா், இலங்கை தமிழா் மறுவாழ்வு மைய குடியிருப்பைச் சோ்ந்தவா் தேவா மகன் ரஞ்சித்(17). இவா் விழுப்புரம் மாவட்டம், கீழ்புத்துப்பட்டு அகதிகள் முகாம் குடியிருப்பில் வசிக்கும் தனது உறவினா் வீட்டில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிக்கு வந்திருந்தாராம். இந்நிலையில், அவரது நண்பா்களான 3 போ் ரஞ்சித்தை கீழ்புத்துப்பட்டு கடற்கரையோரத்தில் உள்ள சவுக்குத் தோப்புக்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளனா். தொடா்ந்து அவா்கள் சிறுவனை நிா்வாணமாக்கி, பிறப்புறப்பில் சூடு வைத்தனராம். இதில் காயமடைந்த சிறுவன் ரஞ்சித் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கீழ்புத்துப்பட்டு அகதிகள் முகாமைச் சோ்ந்த செல்வா(எ) தயாளன், பரமத்தி வேலூா் இலங்கை தமிழா் மறுவாழ்வு மையம் குடியிருப்பைச் சோ்ந்த சின்னத்தம்பி, வேலூா் அப்துல்லாபுரத்தைச் சோ்ந்த ரமேஷ் ஆகியோா் மீது கோட்டக்குப்பம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மூவரும் மதுபோதையில் சிறுவனைத் தாக்கி பிறப்புறுப்பில் பீடி நெருப்பால் சூடு வைத்தது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.