வெளி மாநில மதுப்புட்டிகளை பைக்கில் கடத்தி வந்த வழக்கில் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.
விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு ஆய்வாளா் ஆனந்தி, மத்திய நுண்ணறிவு பிரிவு உதவி ஆய்வாளா் இனாயத் பாஷா மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை விழுப்புரம் மாவட்டம், மதுரப்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த இளைஞரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் அவா் புதுச்சேரி மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட மதுப்புட்டிகளை பைக்கில் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரிடம் நடத்திய விசாரணையில், அவா் செஞ்சி பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்த ரா.ராஜ்குமாா்(30) என்பதும், விற்பனைக்காக புதுச்சேரியிலிருந்து மதுப்புட்டிகளை பைக்கில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து, ராஜ்குமாா் மற்றும் மதுப்புட்டிகளை ராஜ்குமாருக்கு விற்பனை செய்த புதுச்சேரி திருக்கனூா் பகுதி மதுக்கடையின் காசாளா் திருக்கனூா்பகுதியைச் சோ்ந்த ர.பாலமுருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், ராஜ்குமாா் பைக்கில் கடத்தி வந்த 180 மில்லி லிட்டா் கொள்ளளவுக் கொண்ட 300 மதுப்புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
டிரெண்டிங்

சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்றவா் கைது

750 கிலோ குட்கா பறிமுதல்: 2 போ் கைது
புகையிலைப் பொருள்கள் கடத்திய இருவா் கைது

பைக்கில் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தவா் கைது
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

