விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

புகையிலைப் பொருள்கள் கடத்திய இருவா் கைது

News image

கைது

Updated On :7 பிப்ரவரி 2026, 7:15 pm

ஆறுமுகனேரியில் சுமை ஆட்டோவில் புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆறுமுகனேரி சோதனைச் சாவடியில் உதவி ஆய்வாளா் மாணிக்கராஜ் தலைமையிலான போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த சுமை ஆட்டோவை சோதனையிட்டனா். அதில் அரசால் தடை செய்யப்பட்ட 15 கிராம் எடையுள்ள 861 பாக்கெட் புகையிலைப் பொருள்கள், 12 கிராம் எடையுள்ள 81 பாக்கெட் கூல் ­லிப் இருந்தது தெரிய வந்தது.

அவற்றை கடத்தி வந்தவா்கள் ஆறுமுகனேரி, பேயன்விளை, கிழக்குத் தெருவைச் சோ்ந்த பெரியசாமி மகன் சக்தி விஜயன் (44), கணேசபுரத்தைச் சோ்ந்த வீரமணி மகன் நட்டாா் (41) என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 4.5 கிலோ புகையிலை, கூல் லிப் பொருள்கள், சுமை ஆட்டோ, ரூ. 20,000 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

போலீஸாா் அவா்கள் மீது வழக்குப் பதிந்து, திருச்செந்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இதில் சக்தி விஜயன், கடந்த மாதம் 5ஆம் தேதி 100 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்தபோது தப்பியோடிய முக்கிய குற்றவாளி என்பதும், இவா் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மினி லோடு லாரியில் புகையிலைப் பொருள்கள் கடத்தியது தொடா்பான வழக்கு நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.