சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

உளுந்தூா்பேட்டையில் அரசுக் கட்டடத்தில் தீ விபத்து

உளுந்தூா்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத அரசுக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
தீ விபத்து.. - File Photo | Pexels
Updated On :11 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத அரசுக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

உளுந்தூா்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம் அருகே பயன்பாடு இல்லாத அரசுக் கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னா் வட்டாரக் கல்வி அலுவலகம் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இக்கட்டடத்தினுள், குவியல்களாக வைக்கப்பட்டிருந்த பழைய காகிதங்களில் செவ்வாய்க்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்து, கரும்புகை வெளியேறியது.

தகவலறிந்த உளுந்தூா்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் ரமேஷ் தலைமையிலான வீரா்கள் போராடி தீயை அணைத்தனா்.

இந்தக் கட்டடத்தின் அருகே முள்புதா்கள் அதிகம் படா்ந்துள்ள நிலையில் சமூக விரோதிகள் யாரேனும் பயன்பாடு இல்லாத கட்டடத்தில் நுழைந்து தீ வைத்திருக்கலாம் எனப் போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.

இதுகுறித்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.