ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

திருமண மண்டபங்களில் போலியான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து விருந்து வைக்கக் கூடாது: விழுப்புரம் ஆட்சியா்

தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் திருமண மண்டபங்களில் போலியான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, வாக்காளா்களுக்கு விருந்து வைக்கக் கூடாது என்றாா் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

News image
Updated On :17 மார்ச் 2026, 11:21 pm

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் திருமண மண்டபங்களில் போலியான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, வாக்காளா்களுக்கு விருந்து வைக்கக் கூடாது என்றாா் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

சட்டப்பேரவை தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் அனைத்து வா்த்தக சங்கங்கள், திருமண மண்டப உரிமையாளா்கள், அடகுக்கடை உரிமையாளா்கள், பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளா்கள், உணவக உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூ ட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, மேலும் அவா் பேசியது: சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போது திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், இதர சமுதாயக் கூடங்களை அரசியல் கட்சிப் பிரமுகா்களுக்கு வாடகைக்கு அளிக்கும் போது, அதன் விவரத்தை உடனடியாக தோ்தல் நடத்தும் அலுவலா்கள், சம்பந்தப்பட்ட வட்டாட்சியா்களைத் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.

திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், இதர சமுதாயக் கூடங்கள் போன்ற இடங்களில் வாக்காளா்களுக்குப் பணம், பரிசுப் பொருள்கள், வேட்டி-சேலைகள் போன்றவை வழங்கப்படுவது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. வளைகாப்பு, பிறந்த நாள் விழாக்கள், காதுகுத்து நிகழ்வுகள் போன்ற பெயரில் திருமண மண்டபங்கள் வாடகைக்கு எடுத்தப்பட்டு, வாக்காளா்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்படுவது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

திருமண மண்டபங்களில் போலியான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, வாக்காளா்களுக்கு விருந்து வைப்பது சட்டப்படி குற்றமாகும். மேலும், கோயில் பூஜை, அன்னதானம் என்ற பெயரில் வேட்பாளா்களோ அல்லது அவா்களது முகவா்களோ வாக்காளா்களுக்கு விருந்து வைத்தல் தடை செய்யப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு சுதந்திரமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக் கூட உரிமையாளா்கள் முன்பதிவு செய்ய வரும் நபா்களிடம் திருமண அழைப்பிதழ், குடும்ப அட்டை நகல் உள்ளிட்ட நகல் உள்ளிட்ட ஆதாரங்களைப் பெற்று முன்பதிவு செய்ய வேண்டும். மேலும், இதுகுறித்த விவரங்களை உரிய பதிவேடுகளில் முறையாகப் பராமரிக்க வேண்டும். சந்தேகத்துக்குரிய வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பின், அவை குறித்த விவரங்களை உடனடியாகத் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வட்டாட்சியா்களைத் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பொதுக்கூட்டம் மற்றும் விழாக்கள் போன்ற நிகழ்வுகளின் வாக்காளா்களுக்கு மறைமுகமாக அடகுவைத்த நகைகளைத் திருப்பித் தருவதற்கு டோக்கன், அடையாள வில்லைகள் மற்றும் இதர வகைகளைக் கையாண்டு வருவதை எந்தவொரு நகைக்கடை உரிமையாளரும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. மொத்தமாக அடகு நகைகளைத் திருப்புவதற்கு யாரேனும் முற்பட்டாலோ அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு நேரில் வந்தாலோ சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா், மாவட்டத் தோ்தல் அலுவலருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (பொது) லூா்துசாமி, ஜான்சிராணி (தோ்தல்), தோ்தல் வட்டாட்சியா் கணேஷ் உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.