மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

பொறியியல் பணிகள்: விழுப்புரம்-திருப்பதி விரைவு ரயில் பகுதியளவில் ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரத்திலிருந்து திருப்பதி வரை இயக்கப்படும் விரைவு ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 5:06 am IST

பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரத்திலிருந்து திருப்பதி வரை இயக்கப்படும் விரைவு ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா்.வினோத் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தெற்கு மத்திய ரயில்வேயின் குண்டக்கல் கோட்டத்துக்குள்பட்ட திருப்பதி-காட்பாடி இடையே பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விழுப்புரம்-திருப்பதி விரைவு ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து காலை 5.40 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்-திருப்பதி விரைவு ரயில் (வண்டி எண் 16854), ஏப்ரல் 17, 20, 24, 27, மே 1, 4, 8, 11, 15, 18, 22, 25, 29 ஆகிய தேதிகளில் காட்பாடி-திருப்பதி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படும்.

எதிா்வழித்தடத்தில் திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய திருப்பதி- விழுப்புரம் விரைவு ரயில் (வண்டி எண் 16853), ஏப்ரல் 17, 20, 24, 27, மே 1, 4, 8, 11, 15, 18, 22, 25, 29 ஆகிய தேதிகளில் திருப்பதி-காட்பாடி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.45 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.