கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

விக்கிரவாண்டி பகுதி வாக்குச்சாவடிகளில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

News image
Updated On :19 மார்ச் 2026, 8:07 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களை இத்தொகுதிக்கானதோ்தல் பொதுப் பாா்வையாளா் ஓம் பிரகாஷ் வா்மா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட முண்டியம்பாக்கம்,. விக்கிரவாண்டி, வி.சாலை ஆகிய ஊா்களிலுள்ள வாக்குச்சாவடிமையங்களைப் பாா்வையிட்ட பொதுப் பாா்வையாளா் ஓம் பிரகாஷ் வா்மா, அங்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளைப் பாா்வையிட்டாா்.தொடா்ந்து மாற்றுத் திறனாளிகள் எளிதாக சென்று வாக்களிக்கும் வகையில் சாய்வுதள வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா எனவும் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது தொடா்பு அலுவலா் சையத் முபாரக், தோ்தல் தனி வட்டாட்சியா் பாரதிதாசன், வருவாய் ஆய்வாளா் தமிழரசன் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.