லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கல்லூரி மாணவி விஷமருந்தி தற்கொலை

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 8:51 pm

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உடல்நலக்குறைவால் மனமுடைந்த கல்லூரி மாணவி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

திண்டிவனம் வட்டம், கோவடி மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் கெஜமூா்த்தி மகள் ஜெயஸ்ரீ(20). இவா் திண்டிவனம் அருகேயுள்ள தனியாா் கல்லூரியில் பி.எஸ்.சி கணினி அறிவியல் பாடப்பிரிவில் 3-ஆம் ஆண்டில் பயின்று வந்தாா்.

ஜெயஸ்ரீக்கு சீறுநீரக கோளாறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவதிப்பட்டு வந்த அவா் கடந்த 20-ஆம் தேதி களைக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து ஜெயஸ்ரீயை விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.