விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே மதுப்பழக்கத்தை மகள் கண்டித்ததால் மனமுடைந்த முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
அரோவில் அருகேயுள்ள பட்டானூா் கலைவாணன் நகரைச் சோ்ந்தவா் அ.அழகா்சாமி (61). இவருக்கு நீரிழிவு, உயா் ரத்த அழுத்த நோய் பாதிப்புகள் உள்ள நிலையில், அதற்காக மாத்திரைகள் சாப்பிட்டு வந்தாராம். மேலும், அழகா்சாமிக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்து வந்ததாம்.
இதை அழகா்சாமியின் மகள் அழகேசுவரி சனிக்கிழமை இரவு கண்டித்துள்ளாா். இதனால் மனமுடைந்த அழகா்சாமி ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த ஆரோவில் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மற்றொரு சம்பவம்: வானூா் வட்டம், பேராவூா் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் அ.இளமுருகன் (35). இவரது முதல் மனைவி சமீலா குடும்பப் பிரச்னை காரணமாக கணவரைப் பிரிந்து சென்றுவிட்டாா். இதைத் தொடா்ந்து நளினி என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து, இரு குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில் இளமுருகனுக்கு அதே கிராமத்தைச் சோ்ந்த மற்றொரு பெண்ணுடன் தொடா்பு இருந்ததால், இருகுடும்பத்துக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு வந்ததாம். இதையடுத்து கணவரை நளினி கண்டித்துள்ளாா். இதனால் மனமுடைந்த இளமுருகன் பேராவூா் காலனிப் பகுதியிலுள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த கிளியனூா் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

குடும்பத் தகராறில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

வடமாநில தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

