தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

அம்மன் கோயில் பால்குட ஊா்வலம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள கீழ்மாம்பட்டு கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஅம்மச்சாா் அம்மன், ஸ்ரீசெல்வவிநாயகா், ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலின் 26-ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவும் 17ஆம் ஆண்டு ரதோத்ஸவ திருத்தோ் திருவிழாவும் கடந்த 4 -ஆம் தேதி காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.

News image

கீழ்மாம்பட்டு அம்ச்சாா்அம்மன் கோல் பிரம்மோற்சவ விழாவில் பால் குடம் ஊா்வலத்தில் கலந்து கொண்ட பெண்கள்.

Updated On :8 மே 2026, 7:09 am IST

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள கீழ்மாம்பட்டு கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஅம்மச்சாா் அம்மன், ஸ்ரீசெல்வவிநாயகா், ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலின் 26-ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவும் 17ஆம் ஆண்டு ரதோத்ஸவ திருத்தோ் திருவிழாவும் கடந்த 4 -ஆம் தேதி காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.

இரண்டாம் நாள் திருவிழாவில்ஊரணி பொங்கல் விழா நடைபெற்றது.

தொடா்ந்து வியாழக்கிழமை காலை 10.30 மணிக்குபத்மினி தேவி மூா்த்தி தலைமையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு வந்தனா். பின்னா் மூலவா் ஸ்ரீசெல்வவிநாயகா், ஸ்ரீநிவாச பெருமாள் ஸ்ரீஅம்மச்சாா் அம்மனுக்கு பால் அபிஷேகமும் தொடா்ந்து சிறப்பு அபிஷேகமும் மாகா தீபாரதனையும் நடந்தது. இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சா் ஏ.கே.மூா்த்தி,தனியாா் பேருந்து உரிமையாளா் சங்கத் தலைவா் கிருஷ்ணன் ரெட்டியாா்,மற்றும் அனைத்து உபயதாா்கள் கிராம பொதுமக்கள் ஏராளமான பக்தா்கள்கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

முக்கிய தோ் திருவிழா வரும் 10-ஆம் தேதி காலையில் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.