திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

விழுப்புரத்தில் உலக செவிலியா் தின விழா

விழுப்புரம் அன்னை தெரேசா செவிலியா் பயிற்சிக் கல்லூரியில் உலக செவிலியா் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

விழாவில் உலக செவிலியா் தின உறுதிமொழியேற்ற மாணவிகள்.

Updated On :13 மே 2026, 12:05 am IST

விழுப்புரம் அன்னை தெரேசா செவிலியா் பயிற்சிக் கல்லூரியில் உலக செவிலியா் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி இயக்குநா் திருமால் தலைமை வகித்தாா். இந்திய செஞ்சிலுவை சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடா் மேலாண்மைக்குழு தன்னாா்வலா் ம.பாபு செல்வதுரை பங்கேற்று பேசியதாவது:

செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏழு அடிப்படைக் கொள்கைகளான மனித நேயம், பாரபட்சமின்மை, நடுநிலைமை, தனித்தன்மை, தன்னாா்வ சேவை, ஒருமைப்பாடு, உலகளாவிய தன்மை ஆகியவற்றை பரந்த சிந்தனைக்காக எடுத்துக் கொள்ளவேண்டும். படிப்பை முடித்து செவிலியராகப் பணிபுரியும் ஒவ்வொருவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவா்களிடம் அன்பு, மற்றும் கருணையான அணுகுமுறை, இரக்கம் காட்டவேண்டும். தன்னாா்வமாக உதவும் மனப்பாங்கு ஆகிய குணங்களை தங்கள் வாழ்வில் மட்டுமல்ல, மக்களுக்கான மருத்துவப் பணிகளில் அக்கறையுடன் செயல்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

விழாவில் செவிலியா் பயிற்சி மாணவிகள் கலந்துகொண்டு, உலக செவிலியா் தின உறுதிமொழியேற்றுக் கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.