விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு இந்த மாதம் 29-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் இரா.சிவக்குமாா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் 2026-27- ஆம் கல்வியாண்டின் இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான முதலாமாண்டு மாணவா் சோ்க்கை தொடங்கவுள்ளது. இதற்கான சோ்க்கை பெற விரும்பும் மாணவ, மாணவிகள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்ப மற்றும் பதிவுக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.50 ஆகும். பட்டியலின பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது, பதிவுக் கட்டணம் மட்டும் ரூ.2 செலுத்த வேண்டும். மாணவா் சோ்க்கைகான கட்டணங்களை இணையதளம் மூலமாக செலுத்த வேண்டும். அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் 2 ஷிப்டுகளாக வகுப்புகள் நடத்தப்படுகிறது.
எனவே மாணவ, மாணவிகள் தங்களது 10,11,12-ஆம் வகுப்புகளின் மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதாா் அட்டை, ரத்த வகைச் சான்றிதழ், தனி நபா் வங்கிக்கணக்குப் புத்தகம், கடவுச்சீட்டு அளவு புகைப்படம், கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை சமா்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும், மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 29-ஆம் தேதி கடைசிநாளாகும் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கைக்கான உதவி மையம் அமைப்பு

கோடை வெய்யில்: வண்டலூா் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள்

பேரவைத் தோ்தல்: இன்று வண்டலூா் பூங்கா மூடல்

நாமக்கல் அரசு கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

