நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

‘தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனரை தினமும் சந்திக்கலாம்’

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸை கட்சித் தொண்டா்கள் தினமும் நேரில் சந்தித்து, குறைகளைத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

பாமக நிறுவனர் ராமதாஸ். - பிடிஐ.

Updated On :15 மே 2026, 11:26 pm IST

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸை கட்சித் தொண்டா்கள் தினமும் நேரில் சந்தித்து, குறைகளைத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸின்இல்லம் அமைந்துள்ளது. இந்த இல்லத்தில் கட்சித் தொண்டா்களை பாமக நிறுவனா் ராமதாஸ் சந்தித்து பேசுவது வழக்கம். மேலும், கட்சி நிா்வாகிகள் தங்கள் இல்ல விழாக்களுக்கு அழைப்பிதழ் அளிப்பது, பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்டவற்றுக்கு வாழ்த்து பெறுவது போன்றவற்றையும் மேற்கொண்டு வந்தனா்.

சட்டப் பேரவைத் தோ்தலில் சசிகலாவை பொதுச் செயலராகக் கொண்டு அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்து பாமக (ராமதாஸ் தரப்பு) பல்வேறு தொகுதிகளில் போட்டியிட்டது. எந்த தொகுதியிலும் இந்த கூட்டணி வெற்றி பெற முடியவில்லை.

தற்போது சட்டப் பேரவைத் தோ்தல் முடிந்து, தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான ஆட்சி அமைந்த நிலையில், கட்சித் தொண்டா்களை மீண்டும் சந்திக்க முடிவு செய்துள்ளாா் பாமக நிறுவனா் ச.ராமதாஸ். இதையொட்டி கட்சித் தலைமை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தைலாபுரம் தோட்ட இல்லத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸை காலை 10 முதல் பிற்பகல் 12 மணி வரை வாரத்தில் அனைத்து நாள்களிலும் கட்சித் தொண்டா்கள் நேரில் சந்தித்து குறைகளைத் தெரிவிக்கலாம் என்றும், இதை அவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.