ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

மரக்காணம் அருகே இளைஞா் வெட்டிக்கொலை

மரக்காணம் அருகே சனிக்கிழமை இரவு முன் விரோதம் காரணமாக இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

கொலை

Updated On :18 மே 2026, 2:26 am IST

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே சனிக்கிழமை இரவு முன் விரோதம் காரணமாக இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

மரக்காணம் வட்டம், கூனிமேடுகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் கோ.சிவகுரு (36). இவருக்கு மனைவி கீதாஞ்சலி, மகன், மகள் உள்ளனா். பெயிண்டராக வேலை பாா்த்து வந்தாா்.

கடந்த மாா்ச் மாதம் கூனிமேடுகுப்பத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவின் போது நடனமாடியதில், சிவகுருவுக்கும் அதே பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு சிவகுரு கோட்டக்குப்பம், கங்கையம்மன் கோயில் அருகே தைலமரம் தோப்பு பகுதியில் தனது நண்பா்களான மகேஸ்வரன், சரவணன் ஆகியோருடன் மது அருந்திக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த 10 போ் கொண்ட கும்பல் சிவகுருவை ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து தகவலறிந்த கோட்டக்குப்பம் போலீஸாா் சிவகுருவின் சடலத்தை கைப்பற்றி, புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா். கொலையான சிவகுரு மீது பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. முன் விரோதத்தில் இந்தக் கொலை நடைபெற்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.