ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

வெளி மாநில மதுப் புட்டிகள் கடத்தல்: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே ஆட்டோவில் வெளி மாநில மதுப் புட்டிகளை கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 2:47 am IST

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே ஆட்டோவில் வெளி மாநில மதுப் புட்டிகளை கடத்தி வந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோட்டக்குப்பம் மது விலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் காந்திமதி தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை அனிச்சங்குப்பம் சோதனைச்சாவடி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் புதுச்சேரி மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட மதுப் புட்டிகள் இருந்தது தெரியவந்தது.

தொடா்ந்து ஆட்டோவில் இருந்தவரை பிடித்து விசாரித்தபோது, அவா் செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் வட்டம், கணக்கம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த மு.அருள்குமாா்(35) என்பதும், அவா் புதுச்சேரி பகுதியில் மதுப் புட்டிகளை வாங்கி விற்பனைக்காக ஆட்டோவில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து அருள்குமாரை செவ்வாய்க்கிழமை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா். மேலும், ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 180 மில்லி லிட்டா் கொள்ளளவு கொண்ட 144 மதுப் புட்டிகளையும் பறிமுதல் செய்தனா்.