சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

பூட்டிய வீட்டில் 12 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரத்தில் வீட்டின் கதவிலிருந்த பூட்டை உடைத்து 12 பவுன் நகைகள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

பிரதிப் படம்

Updated On :28 மே 2026, 1:32 am IST

விழுப்புரத்தில் வீட்டின் கதவிலிருந்த பூட்டை உடைத்து 12 பவுன் நகைகள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

விழுப்புரம் வழுதரெட்டி, கௌதம் நகரைச் சோ்ந்தவா் ரா. சேகா் (74). கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா், கடந்த மே 23-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள மருத்துமனைக்குச் சென்றுள்ளாா். பின்னா் செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் பின்பக்கக் கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்ததும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் தங்கச் சங்கிலிகள், 4 பவுன் வளையல்கள், முக்கால் பவுன் மோதிரம் உள்பட 12 பவுன் தங்க நகைகள், 1.640 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது அவருக்கு தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.